• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா

September 17, 2018 தண்டோரா குழு

கோவை ஈசா பொறியியல்கல்லூரியின் 6வது பட்டமளிப்புவிழா இன்று நடைபெற்றது

கோவை பாலக்காடுசாலை,நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்புவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் இன்று நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி தலைமைதாங்கி 156 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.கல்லூரி தாளாளர் டி.ஈ.சுஜாதா,தலைமை செயல் அலுவலர்கள் டி.ஈ.அஜித்,டி.ஈ.ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் ராபர்ட்கென்னடி அனைவரையும் வரவேற்று,கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கற்பகம் உயர்கல்விதுறை துணைவேந்தர் சுடலைமுத்து கலந்துக்கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் இவ்விழாவில் பேசிய கல்லூரியின் தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி,

“மாணவர்கள் அனைவருக்கும் உங்களின் வாழ்வின் முதல் வெற்றியாக கருத வேண்டும்.பல தகவல்களை உள்ளடக்கிய இந்த உலகில் தகவல்களை சேகரித்து, திறமைகளை வெளிக்கொண்டு,இதுபோன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்”.

இவ்விழாவில் அண்ணாபல்கலைக்கழக 16வது தரசான்றிதழ் பட்டத்தை எம். இ.,தகவல்தொழில்நுட்பம் துறை மாணவி சமனாபெற்றுக்கொண்டார்.மேலு‌ம் கல்லூரியின் சார்பாக ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் பிரிவில் 58 பேருக்கும்,சிவில்பிரிவில் 23 பேருக்கும்,கணினிஅறிவியல் பிரிவில் 10 பேருக்கும், இஇஇபிரிவில் 11 பேருக்கும்,இசிஇபிரிவில் 17 பேருக்கும்,பி. டெக்ஐடிபிரிவில் 2 பேருக்கும்,முதுகலை பட்டப்படிப்பில் ஸ்டக்சரில் இன்ஜினியரிங் பிரிவில் 10 பேருக்கும்,கட்டிடம் மற்றும் நிர்வாகம் பிரிவில் 3 பேருக்கும்,கணினிபிரிவில் 4 பேருக்கும்,தகவல்நுட்பம்பிரிவில் 11 பேருக்கும்,பவர் எலக்ட்ரானிக் பிரிவில் 3 பேருக்கும்,தயாரிப்பு பொறியியல் பிரிவில் 1 நபருக்கும்,எம்.பி.ஏ.பிரிவில் 3 ேருக்கும் என அனைத்து துறைகளிலும் உள்ள மொத்தம் 156 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க