September 17, 2018
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற வாய்ப்புள்ளதால் அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகத்தில் அனேக இடங்களிலும்,தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம்,புதுச்சேரி கடல்பகுதியிலும் மணிக்கு 45-55 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்.அடுத்த 3 தினங்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.