September 17, 2018
தண்டோரா குழு
சென்னை,அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மீது செருப்பு வீசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறந்த சிந்தனையாளராக,சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக,புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக,பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து,சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகளின் சார்பில் இன்று மாலை அணிவிக்கப்பட்டது. இதற்கிடையில்,அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார்.இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.இதனைத்தொடர்ந்து,பெரியார் சிலையை அவமதித்த நபரை கைது செய்ய வேண்டும் என விசிக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கிண்டி ஈக்காட்டுத் தாங்கலைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.அவரின் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து,கைது செய்யப்பட்ட ஜெகதீசனிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.