September 17, 2018
தண்டோரா குழு
தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியதை செலுத்தினார்.
சிறந்த சிந்தனையாளராக, சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியதை செலுத்தினார்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.