September 15, 2018
தண்டோரா குழு
கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் ரோபோ விநாயகர்கள் இசைக்கருவிகளை வாசித்த காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு நூதன முறையிலான வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. கோவை சாய்பாபா காலனி அண்ணா நகர் பகுதியில் உள்ள விவேகானந்தர் இளைஞர் பொதுநல மன்றம் சார்பில் 21ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. 8 அடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக விநாயகர், முருகன் மற்றும் அம்மனுக்கு 158 விளக்கு பூஜை நடைபெற்றது. விழக்கு பூஜையின் ஒரு பகுதியாக 5 ரோபோ விநாயகர்கள் அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோபோ விநாயகர்கள் கீபோர்ட், கிட்டார், டிரம்பெட், வயலின் மற்றும் டிரம்ஸ்கள் இசைத்தது பொதுமக்களையும் பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.