September 15, 2018
தண்டோரா குழு
கோவையை அடுத்த நவ இந்தியா சிக்னல் அருகே நெய்தல் என்ற புதிய ஹோட்டல் திறக்கப்பட்டு உள்ளது. மீன் உணவுக்கு பிரபலமானதாக இருக்கும் இந்த உணவகத்தில் புதிய யுக்தியை கையாளுகின்றனர்.இதற்கு காரணம் , மற்ற அனைத்து உணவகங்களை போல மீன் உணவுகள் இங்கும் இருந்தாலும், இந்த மீன்களை இங்கு வரும் பொதுமக்கள் நேரடியாக பிடித்து, அதனை சமைத்து தர கூற முடிகிறது.
இதனால் பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான மீனை நேரடியாக தொட்டியில் இருந்து, பிடித்து அதனை உண்ணும் அனுபவத்தை இந்த உணவகம் அளிக்கிறது. இது மட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட பல வகையான மீன்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது.
இது குறித்து இந்த உணவகத்தின் உரிமையாளர் அபிலாஷ் கூறுகையில்,
மீன்கள் அனைத்தும் மிகவும் சுத்தமாக மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் முயற்சியில் இந்த உணவகத்தை துவக்கியுள்ளேன். இந்த உணவகத்தில் மீன்கள் ருசியாக இருக்க வித்தியாசமான மசாலாக்களை கொண்டு சமைக்கப்படுவதாகவும், முன்னணி ஹோட்டல்களில் பணியாற்றிய சமையல் கலைஞர் தாம்சன் இந்த ஹோட்டலில் பணியாற்றுகிறார் எனவும் கூறினார்
.
இந்த உணவகத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான மீன்களை பிடித்து உண்டு மகிழ்கின்றனர். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த உணவகம் திறந்திருக்கும்.