September 15, 2018
தண்டோரா குழு
பதவி கொடுக்கவில்லை என்றால் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம் தான் என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கபட்டுள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டவர், இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்ச பேட்டி குறித்து தெரியாது என்றார். மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்வதாகவும், மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவதாகவும் கூறினார்.
மேலும், முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் நிலைமையை பேசி, அதன் பிறகு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதவி கொடுக்கவில்லை என்றால் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம் தான் என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கபட்டுள்ளது என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.