September 15, 2018
பேரறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் இதில் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதைப்போல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.