September 14, 2018
தண்டோரா குழு
அதிமுக அமைப்புச் செயலாளராக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக., மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் செப்.19ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை 4 நடைபெறும் என அதிமுக., வின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமாகிய எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்.
மேலும், கட்சியின் சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன் மற்றும் அமைப்புச் செயலாளராக விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.