September 14, 2018
திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின் திமுக பொருளாளராக இருந்த முக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து, திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்,திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார். டி.ஆர்.பாலுவை நியமித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.