• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னாச்சு விஜிக்கு? பிக் பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம் !

September 12, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஆரம்பத்தில் 16 பேர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது நடிகைகள் மும்தாஜ்,விஜயலட்சுமி,ஐஸ்வர்யா,ஜனனி ஐயர்,ரித்விகா,யாஷிகா,தாடி பாலாஜி உட்பட 7 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் 1 போட்டியாளர்களான ஆர்த்தி,காயத்திரி ரகுராம்,சினேகன்,சுஜா வருணி ஆகியோர் வந்துள்ளனர். இந்நிலையில்,இன்றையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இன்றைய ப்ரோமோவில் விருந்தினராக வந்துள்ள சிநேகன் போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

இதனையடுத்து சமீபத்தில் வெளியான ப்ரோமோவில்,மும்தாஜ் கதறி அழுவது போன்றவும்,சிநேகன் மும்தாஜை சமாதனப்படுத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில்,மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இதில் டாஸ்கிற்கான போட்டி நடந்து கொண்டிருந்த போது பாலாஜியால் விஜயலட்சுமி கீழே விழுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவது போலும் காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க