• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சதுரங்கவேட்டை- 2 படம் சம்பள பாக்கி: அரவிந்த்சாமிக்கு மனோபாலா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

September 12, 2018 தண்டோரா குழு

மனோபாலா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நட்டி நட்ராஜன் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சதுரங்க வேட்டை.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை-2 படம் உருவாகியுள்ளது.இப்படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கான முயற்சி நடந்து வருகிறது.

இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,அரவிந்த் சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்து சேர வேண்டும் என்று கூறப்பட்டது.இதையடுத்து படத்தயாரிப்பாளர் மனோபாலா செப்.20-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க