September 12, 2018
தண்டோரா குழு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும்,இதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதும் மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும்,அதைபோல் முன்னாள் முதல்வர்கள் அண்ணா,ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.