September 11, 2018
தண்டோரா குழு
அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் வெண்கலச்சிலை வடிவமைப்புப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.
சென்னை மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் மறைந்த கருணாநிதியின் 8 அடி உயர முழு வெண்கலசிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கருணாநிதி சிலையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புதுப்பேடு வந்தார்.கருணாநிதியின் உருவ சிலையை பார்த்த பின்பு சிற்பிகள் தீனதயாளன்,கார்த்திக் ஆகியோரிடம் சில ஆலோசனைகளை வழங்கினார்.சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்காக இந்த சிலை வடிவமைக்கப்படுகிறது.
கருணாநிதி சிலையை வடிவமைக்கும் சிற்பி ஏற்கனவே அண்ணா சிலை,காமராஜர் சிலை,கண்ணகி சிலை,முரசொலி மாறன் சிலை,சிங்கார வேலர் சிலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.