• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 8, 2018 தண்டோரா குழு

கோவையில் ரோட்டரி கிளப் சார்பாக உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி லஷ்மி மில் சிக்னல் அருகே இன்று நடைபெற்றது.

இந்தியாவில் விபத்துகளால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர்,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் முதலுதவி அளித்தாலே 50 சதவிகிதத்திற்கும் மேலாக விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பாற்ற முடியும்.நம்மில் பல பேருக்கு முதலுதவி அளிப்பது குறித்து சரியாக தெரியாததாலே பல உயிர்களை காப்பாற்ற முடியாமல் போகின்றது.

இதனையடுத்து அனைவரும் முதலுதவி அளிக்க முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தின் சார்பாக போக்குவரத்து துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் தலைமையில்,விழிப்புணர்வு நோட்டீஸ் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகே வழங்கப்பட்டது.மேலும்,குழந்தைகளுக்கு முதலுதவி குறித்த பயிற்சியை பள்ளிகளில் இருந்தே கற்றுக்கொடுக்க முன் வர வேண்டும் என்றுக் கூறினார்.

மேலும் படிக்க