• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக கேரள எல்லையில் உள்ள கிராமங்களில் கடுமையான சோதனை செய்யப்படுகிறது – சுகாதாரத்துறை இணை இயக்குநர்

September 7, 2018 தண்டோரா குழு

எலிக்காய்ச்சலை தடுக்க தமிழக கேரள எல்லையில் உள்ள 18 எல்லை கிராமங்களிலும் கடுமையான சோதனை செய்யப்பட்டு வருதாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி கூறுகையில்,

“எலிக்காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்று தான்.யாரும் பீதி அடையவோ கவலைப்படவோ அவசியமில்லை.சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும் எனவும்,தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.குடிநீரிலும் குலோரினேசன் செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.கோவையில் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும்,கேரளா சென்று வருபவர்களுக்கு தான் எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துள்ளோம்.எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்பட உத்தரவிட்டுள்ளதாகவும்,தமிழக கேரள எல்லையில் உள்ள 18 எல்லை கிராமங்களிலும் கடுமையான சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும்,கிணத்துக்கடவை சேர்ந்த சதீஷ் உயிரிழப்பிற்கு காரணம் அவர் தாமதமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான்,காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது இருந்தால் உடனே தெரிவிக்ககோரி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி பரிசோதிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்”.

மேலும் படிக்க