• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கானா சட்டபேரவை கலைப்பு !

September 6, 2018 தண்டோரா குழு

ஆட்சிகாலம் 9 மாதங்கள் இருந்த போதும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா சட்டபேரவை கலைக்கப்பட்டது.தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றார்.இவரது ஆட்சிக்காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் மீதமுள்ள நிலையில்,சட்டப்பேரவை கலைப்பு முடிவை தமது அமைச்சர்களிடம் தெரிவித்தார்.இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து,அமைச்சரவையின் பரிந்துரையை முதல்வர் சந்திரசேகர ராவ்,ஆளுநர் நரசிம்மனிடம் நேரில் சந்தித்து சட்டப்பேரவை கலைப்பிற்கு அனுமதி அளிக்குமாறு கோரினார்.மேலும் மத்தியபிரதேசம்,ராஜஸ்தான்,சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களுடன் தெலங்கானா தேர்தலையும் நடத்த வேண்டுமெனவும் ஆளுநரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.இதனை ஏற்றக்கொண்ட ஆளுநர்,அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிப்பதாக கூறினார்.

மேலும்,தெலங்கானாவில் புதிய அரசு அமையும் வரை மாநிலத்தின் பொறுப்பாளராக செயல்பட முன்வர வேண்டும் என்றும் சந்திரசேகர ராவிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.மாநில பிரச்னையை முன்வைத்து சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டி எதிர்கொள்ளவே முதலமைச்சர் இந்த ஆட்சிக்கலைப்பை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க