September 5, 2018
தண்டோரா குழு
கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சி நினைவு மண்டபத்தில் அவரது சிலை மற்றும் அவர் இழுத்த செக்கிற்கு இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“வ.உ.சியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கோவை மாநகரில் வ.உ.சிக்கு சிலை வைக்க வேண்டும். என்றும் கோவை மத்திய சிறையில் வ.உ.சி அடைக்கப்பட்டிருந்த அறையை பராமரிப்பு செய்து அதனை நினைவு சின்னமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசையுடன் பிரச்சினையில் ஈடுபட்ட சோபியா எனற பெண் முன்னதாகவே தமிழிசையுடன் விமானத்தில் பயணம் செய்வதாக ட்வீட் செயதுள்ளார்.விமானத்திற்குள் கோஷம் எழுப்புவது தண்டணைக்குரிய குற்றம் என்பது கனடா சென்ற பெண்ணுக்கு தெரியும் என்றும் வேண்டுமென்றே இந்த செயலை அவர் செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்
ஏற்கனவே சோபியா மக்கள் அதிகாரம் மே 17 உள்ளிட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் எழுதியுள்ளார்.இதேபோல் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது சேலத்தில் செருப்பு வீசி சமூக விரோத அமைப்பை சேர்ந்தவர்கள் அவமானப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.கிறிஸ்தவரான சோபியாவின் தந்தை தேவையில்லாமல் தேவேந்திர குலம் எனும் சாதியை குறிப்பிட்டு தற்போது சாதி பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கிறார் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டு தேசிய பாடுக்காப்பு சடடத்தில் அடைக்கப்பட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கனடாவில் இருக்கும் இயக்கம் ஒன்று தமிழ்நாடு தனிநாடு வேண்டும் என கிளப்பி வருவதாகவும்,அந்த அமைப்பினருடன் சோபியாவுக்கு தொடர்பு இருப்பதால் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும்,அவருக்கு பின்னணியில் இருக்கும் நக்சல் இயக்கங்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.திமுக தலைவர் ஸ்டாலின் நக்சல் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் இது போன்றவர்களுக்கு ஆதரவு தரக் கூடாது எனவும்,தேவையில்லாமல் இந்த விஷயத்தில் நக்சல் மற்றும் தேசவிரோத குழுக்களின் ஆலோசனைகளை கேட்டு கருத்து தெரிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.ஸ்டாலின் சோபியாவுக்கு அதரவாக வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் பிரிவினைவாதிகளை ஆதரிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.ஸ்டாலின் வேண்டுமென்றே இந்த நக்சல் வளையத்துக்குள் மாட்டிக் கொள்வதாகவும் அதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்”இவ்வாறு பேசினார்.