September 4, 2018
தண்டோரா குழு
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் முன்னணி நடிகரான மோகன்லால் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, சர்வதேச மலையாள ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பாக, புதிய கேரளாவை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பு குறித்து மோகன் லால் தனது முகநூல் பக்கத்தில்,
மரியாதைக்குறிய பிரதமர் மோடியை கிருஷ்ண ஜெயந்தி நாளில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக சேவை முயற்சிகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது. பிரதமர் மோடியும் தனது ஆதரவினை விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் செய்யப்படும் சேவைகளுக்கு அளிக்க தயாரா உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கதில்,
நேற்றைய தினம் மேகன்லாலை சந்தித்தேன். அவரது பரந்த சமூக சேவை முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியை. இந்த சேவை உணர்வு மற்றவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இச்சந்திப்பிற்கு பின்னால் அரசியல் நோக்கம் இருக்கலாம் என தகவல்கள் கசிந்து வருகின்றது. வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், திருவனந்தபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூருக்கு எதிராக பாஜக சார்பில் நடிகர் மோகன் லால்-னை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது என்னும் தகவல்களும் பரவி வருகின்றது.