• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் கட்சிகள் சோபியாவின் செயலை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது– வானதி ஸ்ரீனிவாசன்

September 4, 2018 தண்டோரா குழு

வன்முறைக்கு இடமில்லை என்று சொல்லும் அரசியல் கட்சிகள் சோபியாவின் செயலை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக துணைப் பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,நேற்று சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.அப்போது அவர் பயணித்த விமானத்தில் இருந்த சோபியா என்ற மாணவி,‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷம் போட்டு அவரிடம் பிரச்சனை செய்தார்.இதைத் தொடர்ந்து,தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும்,தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து,தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்தப் புகாரின் பேரில்,சோபியா மீது காவல்துறையினர் 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர்,15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில்,தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.எனினும், மாணவி சோபியா கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள்உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,தமிழக பாஜக துணைப் பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“ஜனநாயகத்தில் “வன்முறை”-க்கு இடமில்லை என்று சொல்லும் அரசியல் கட்சிகள் சோபியாவின் செயலை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.எங்கள் மீதான “விமர்சனத்தை” மட்டுமல்ல எங்கள் இயக்க சகோதரர்களின் படுகொலைகளையும் ஜனநாயக ரீதியாகவே எதிர்கொண்டிருக்கிறோம்”. எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க