September 3, 2018
தண்டோரா குழு
தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் இன்று திராவிடர் தமிழர் கட்சியினர் மனு அளிக்க வந்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி மனு அளித்தனர்.தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும்,கோவையில் அருந்ததியர் மக்களுக்கு எதிராக தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருவதாகவும்,தீண்டாமை கொலைகள் தற்கொலைகளாகவும்,விபத்து மரணங்களாக மாற்றம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும்,திராவிடர் தமிழர் கட்சியனர் தலித் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எஸ்.சி-எஸ்.டி 1989 சட்டத்தின்படி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமங்களுக்கு பரிந்துரை செய்யகோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.