September 3, 2018
தண்டோரா குழு
சாலைகளை சீரமைக்க கோரி கோவை மாநகர ஆணையாளரிடம் முன்னாள் மேயர் இன்று மனு அளித்தார்.
கோவையை அடுத்த சாய்பாபாகாலனி,கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக பாதாள சாக்கடை,குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டதன் காரணமாக,முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவை மாநகரின் முன்னாள் மேயரான காலனி வெங்கடாச்சலம் என்பவர் கோவை மாநகர ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார்.இந்த சாலைகளை பயன்படுத்தும் மக்கள் தினமும் அவதிப்படுவதாகவும்,வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் கீழே விழும் நிலை ஏற்படுவதால் உடனடியாக சாலைகளை செப்பனிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.