September 3, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நான் சந்திக்க மாட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி,சென்னையில் வருகிற 5ம் தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.இதற்காக கடந்த வாரம் மதுரையில் தனது தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார் அவரை சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு சந்திக்க மாட்டேன் என அழகரி பதிலளித்தார்.மேலும்,அமைதி பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள்.5-ந்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது எனது முடிவை தெரிவிப்பேன்”இவ்வாறு பேசினார்.