September 3, 2018
தண்டோரா குழு
தமிழ் திரையுலகில் வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராய் அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில்,”மக்கள் பாதை”அமைப்பின் சார்பாக நடந்த தமிழ் கையெழுத்து இயக்க விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் உடன் நேற்று கலந்துகொண்டார்.அப்போது இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன் என உறுதியேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
`உலகம் வென்ற தமிழ்,நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ்,எனை ஆட்கொண்ட தமிழ்…இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்… தமிழ்விதியெனசெய்” எனக் கூறியுள்ளார்.மேலும்,அந்த பதிவில் தன் பெயரின் முன்னெழுத்தையும் தமிழ்ப்படுத்தி கோ.வெ.பிரகாஷ்குமார் எனக் கையெழுத்திட்டு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.