September 3, 2018
தண்டோரா குழு
திருச்சி முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் 9 மதகுகள் உடைந்தன.மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதகுகள் உடைந்த பகுதியில் நடைபெறுகின்ற சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
“முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் தான் மதகுகள் உடைந்தன.முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து நீரை திறந்துவிட்டு இருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.மேலும் அளவில்லாமல் மணல் கொள்ளையில் ஈடுபட்டதால் மதகுகள் உடைந்ததாக குற்றம் சாட்டினார்.மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை”.இவ்வாறு அவர் கூறினார்.