September 3, 2018
தண்டோரா குழு
கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.மழையால் சேதமான புகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,திரையுலகத்தை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்,அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கேரளாவுக்கு ஒரு கோடி நிதியுதவி வழங்குவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார்.கேரளாவில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்காக தாமும்,தம்முடைய இசைக்குழுவும் சேர்ந்து இந்த நிதியை அளித்துள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.