August 30, 2018
தண்டோரா குழு
திமுகவும்,ஜனசங்கமும் தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.
கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா,காஸ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,
“கருணாநிதியை தமிழக தலைவராக மட்டும் பார்க்க வேண்டாம்,அவர் தேசிய தலைவர். தமிழகத்திற்கு மட்டுமல்ல,இந்திய ஜனநாயகத்திற்கு கருணாநிதி பங்களித்தார்.திமுகவும், ஜனசங்கமும் தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன.எமெர்ஜென்சியை இணைந்து எதிர்த்ததும் இவ்விரு கட்சிகள் தான்.கருணாநிதிக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்திராத கருணாநிதிக்காக அவை ஒத்தி வைக்கப்பட்டது சரித்திர நிகழ்வு”.இவ்வாறு அவர் பேசினார்.