August 30, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் முதல் முறையாக,சிறிய அம்பை எய்து இலக்கை அடைய செய்யும்,டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் துவங்கி உள்ளது.
14ஆவது தேசிய அளவிலான டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இப்போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த 7௦ பேர் கலந்து கொண்டு உள்ளனர்.
இதில் சீனியர் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது.இந்த போட்டிகளின் மூலமாக மாணவர்கள் மன ஒருங்கிணைப்புடன் இருக்க உதவியாக உள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக படிப்புகளில் முழு கவனத்துடன் இருக்கவும் இந்த போட்டி உதவுகிறது.
மேலும் இந்த புதுமையான விளையாட்டு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும்,கோப்பையும் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை பள்ளியில் செய்துள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.