• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள மக்களுக்காக மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் நிதியுதவி

August 25, 2018 தண்டோரா குழு

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு Microsoft நிறுவனத்தின் அதிபர் Bill gates 4.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.

பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.

இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,Microsoft நிறுவன அதிபர் Bill gates, தனது, பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் (bill and melinda gates foundation) மூலம் கேரளாவின் மறுசீரமைப்புக்காக,4.25 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பில்கேட்சின் அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில்,கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் சுகாதார பணிகளுக்கு நாங்கள் வழங்கியுள்ள நிதி,மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க