• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி பைக்கில் பின்னால் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

August 24, 2018 தண்டோரா குழு

இரு சக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியும் விதி அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும், பின்னால் பயணிப்போரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை எனவும் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், பத்திரிகை, டிவி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க