• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழிசை

August 21, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்காக உள்நாட்டு,வெளிநாட்டு நிபுணர்களையும் அழைத்து விவாதம் நடத்தி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் இருந்து பா.ஜ.க சார்பில் தொடர்ந்து கேரளாவிற்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.இன்று பாலக்காட்டிற்கு சென்று பா.ஜ.க சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது.கேரள மாநிலத்திற்கு பாரபட்சமில்லாமல் மோடி தலைமையிலான அரசு உதவுகின்றது எனவும்,இதை சிலர் அரசியலாக்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு தூர்வாறுவதை முதன்மை பணியாக மேற்கொள்ள வேண்டும்.நீர் மேலாண்மைக்கான உள்நாட்டு,வெளிநாட்டு நிபுணர்களையும் அழைத்து விவாதம் நடத்தி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்க கூடாது என வலியுறுத்தினார்.

தற்பொழுது மழை பெய்து வரும் தண்ணீரை சேமிக்கவும் தமிழக அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக பா.ஜ.கவும் நீர் மேலாண்மை குறித்து அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை கேட்டுள்ளது எனவும்,இது தொடர்பாக பா.ஜ.க வும் தமிழக அரசிடம் சில யோசனைகளை முன் வைக்கவுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த மழை வெள்ளம் மூலம் கேரளா நமக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கின்றது.சென்னையில் தூர்வாறும் பணிகளை பொதுப்பணித்துறை,மாநகராட்சி ஆகியோர் மேற்கொண்டு வருவதாகவும், இதில் இருவருக்கும் இடையே யார் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது என்ற குழுப்பம் இருக்கின்றது எனவும் இதை தமிழக அரசு தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வேண்டும் கோரிக்கை வைத்ததை அவர்கள் ஏற்கவில்லை.இதில் உள்நோக்கம் கொண்டதா என்ற எண்ணம் தோன்றுவதாகவும்,அங்கு நாகரீகம் இருந்திருக்க வேண்டும்”இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க