• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் அஞ்சலி

August 17, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் உடலுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்,அமைச்சர் ஜெயக்குமார்,மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

“50 ஆண்டுக் காலம் இரு அவைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய தலைவர் வாஜ்பாய். சிறந்த பேச்சாளர்,இலக்கியவாதி,நிர்வாகத்திறன் மிக்கவர் அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு” என்றார்.

மேலும் படிக்க