• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய் இழப்பை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்– அத்வானி

August 16, 2018 தண்டோரா குழு

ஆர்எஸ்எஸ்-ல் தொடங்கி ஜனசங்கம் உருவானது வரை எங்களது பயணத்தை மறக்க முடியாது என வாஜ்பாய் மறைவுக்குபாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதற்கிடையில் வந்தார். வாஜ்பாயின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. இந்நிலையில், இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாஜ்பாய் மறைவு கருத்து பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானி கூறுகையில்,

தலைமை பண்பு, பேச்சாற்றல், தேசபக்தி, மனித நேயத்தால் மாற்று சித்தாந்தவாதிகளையும் ஈர்த்தவர்; கட்சியின் மூத்த தலைவராக என்னை ஊக்கப்படுத்தி, வழிநடத்தி வந்தவர் வாஜ்பாய்.மூத்தவர் என்பதை விட 65 ஆண்டுகளுக்கு மேலாக என் உற்ற தோழனாக தோள் கொடுத்தவர்: ஆர்எஸ்எஸ்-ல் தொடங்கி ஜனசங்கம் உருவானது வரை எங்களது பயணத்தை மறக்க முடியாது:இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக விளங்கிய வாஜ்பாய் இழப்பை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க