• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமராவதி ஆற்றின் கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

August 16, 2018 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து மொத்தமுள்ள 90 அடியில் 88 அடிவரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்ததால் இன்று காலை வினாடிக்கு 30000கன அடியாக வந்துக்கொண்டிருந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து தற்போது மிக அதிகமாக 35000கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.இதனால் பாதுகாப்புகருதி அணையிலிருந்து 35000 கன அடிநீரும் உபரிநீராக வெளியேற்றபட்டு வருகிறது.

இந்நிலையில் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றபட்டு வரும் சூழலில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிமக்கள் ஆற்றுப்பகுதியில் இறங்கவோ கால்நடைகளை கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்,வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 அழைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க