• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவின் நிலை மிகுந்த வலியை அளிக்கிறது – ராகுல்காந்தி

August 16, 2018 தண்டோரா குழு

கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட்9ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் கனமழையால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.கனமழையால் கேரளா முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதையடுத்து,பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் நிலை மிகுந்த வலியை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று.கேரளாவின் நிலை மிகுந்த வலியை அளிக்கிறது.கேரளாவிற்கு சிறப்பு நிதியுதவி அளிக்கவும்,மீட்புப் பணிகளுக்கு ராணுவம்,கடற்படை வீரர்களை அதிகளவில் அனுப்பவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க