• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் அனைத்துவிசுவாசிகளும் என்பக்கமே உள்ளார்கள் – மு.க.அழகிரி

August 13, 2018 தண்டோரா குழு

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.பின்னர் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள்,திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன்;அது இப்போது தெரியாது.கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் என்பக்கமே உள்ளார்கள் இதற்கு காலம் பதில் சொல்லும் என்றார்.மேலும்,திமுகவில் நான் இல்லாததால் நாளைய அவசர செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு தெரியாது” என்றார்.

மேலும் படிக்க