• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கதறிய படியே கோபாலபுரம் திரும்பிய கலைஞரின் மகள் செல்வி

August 7, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும்,24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.இச்செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் நேற்று முதல் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.

இதற்கிடையில்,இன்று மாலை கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்,சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.மேலும், அவரது உடலுறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாகவும்,சீரற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இந்த செய்தியை கேட்டு காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர்.

இந்நிலையில்,காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் மகள் செல்வி கதறிய படியே கோபாலபுரம் திரும்பியுள்ளார்.அதைபோல் காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின்,குஷ்பு உள்ளிட்டோர் கண்ணீருடன் வெளியேறினர்.

மேலும் படிக்க