• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிப்பு

August 7, 2018 தண்டோரா குழு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைத்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில் சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,

பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவு அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். மேலும், சிலை கடத்தலில் தொடர்புடைய அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்துடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இம்மனு இன்று நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு ஒரே நாளில் மாற்றிய நிலையில், ஓராண்டாக உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் உத்தரவு ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி, தமிழக அரசு, டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க