• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

August 2, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமீட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில்,

மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. படம் உருவாகாத நிலையில் வாங்கிய சம்பளத்தையும் கமல் திரும்ப அளிக்கவில்லை. எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும், அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என கோரியுள்ளது.

இதையடுத்து, இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. இதனால் ஆகஸ்ட் 10ம் தேதி விஸ்வரூபம் 2 படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க