• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரியாணி கடை தாக்குதல்: நேரில் ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின்

August 2, 2018

திமுகவினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ்,திவாகர் ஆகியோர் கடந்த 28ம் தேதி இலவசமாக பிரியாணி கேட்டு அக்கடையின் பணியாளர்களை தாக்கியுள்ளனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனைத்தொடர்ந்து,இந்த தாக்குதலுக்கு காரணமான திமுகவை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியாணி கடையின் உரிமையாளர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து யுவராஜ்,திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும்,கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் தாக்குதலுக்கு ஆளான பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவருடன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

மேலும் படிக்க