• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் ராகுல் காந்தி !

July 31, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திக்கவுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ
கண்காணிப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வர உள்ளார்.மாலை 4 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை ராகுல்காந்தி சந்திப்பார் என தெரிகிறது.

மேலும் படிக்க