• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து

July 30, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இதையடுத்து,இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய pirapalangaluபிரபலங்களும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் எம்.பி. ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு வந்த அவர்கள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தனர். அப்போது, இலங்கை அதிபர் சிறிசேனாவின் கடிதம் ஒன்றையும் ஸ்டாலினிடம் கொடுத்தனர்.

அதில் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க