• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது போதையில் காலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் கைது

July 28, 2018 தண்டோரா குழு

கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்ட போது மது போதையில் காலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே நேற்றைய தினம் மதியம் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே வந்த கல்வீரம்பாளையத்தை சேர்ந்த சுதர்ஷன் என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்துள்ளார்.அப்போது அவரை நிறுத்தி சோதனை செய்த போது சுதர்ஷன் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

அப்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது காவலர்களிடம் சுதர்ஷன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.தான் பெரிய ஆளு என்றும் முக்கிய பிரமுகர்களை தெரியும் என்றும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர்களை ஒரு நேரத்தில் மிரட்டவும் செய்தார்.

இது தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் ரத்தினபுரி காவல் நிலைய காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுதர்ஷன் மது போதையில் காவலர்களை மிரட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து தான் செய்தது தவறு என்றும் காவலர்களின் பணி குறித்தும் அவர் வருத்தத்துடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில்,அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல்,விபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை ஒட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் முதலில் பொது மக்கள் மத்தியில் வீரமாக பேசிய சுதர்ஷன் வீடியோவும்,தற்போது அப்பாவியாக காவல்துறையினர் குறித்து அவர் பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க