• Download mobile app
22 Feb 2026, SundayEdition - 3665
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க தமிழக ஆளுநர் காவேரிமருத்துவமனைக்கு வருகை

July 28, 2018 தண்டோரா குழு

கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக நேற்று காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.நோய் தொற்று காரணமாக யாரும் அவரை நேரில் சந்திக்க வேண்டாம். அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள்,செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது என்று கூறியிருந்தது.

இதற்கிடையில்,நேற்றிரவு கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.

மேலும் படிக்க