• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

July 26, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் உள்ள,எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று துவங்கியது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள,எம்.சி.ஏ படிப்புகளில் டான்செட் மதிப்புகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.அதன்படி இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று எம்.சி.ஏ படிப்புகளுக்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் துவங்கியது.எம்.சி.ஏ கலந்தாய்விற்காக மொத்தம் 1552 பேர் அழைக்கபட்டு உள்ளனர்.வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் இன்று மட்டும் 666 மாணவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து,எம்.பி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற 29ம் தேதி முதல்,ஆகஸ்ட் நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது.மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க