• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குளத்தில் வீச்சு

July 25, 2018 தண்டோரா குழு

கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குளத்தில் மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை அடுத்த பனமரத்தூர் அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் செல்வாம்பதி குளம் உள்ளது. தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நிறைந்துள்ளது.
இந்நிலையில் குளத்தின் ஓரத்தில் தலை,கைகள்,மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் நீரில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து,தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும்,கொலை செய்யப்பட்ட பெண் யார் எந்த ஊரை சார்ந்தவர்,யார் அவரை கொலை செய்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க