• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆர்பாட்டம்

July 24, 2018 தண்டோரா குழு

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 7 மாதங்களாக செயல்படாமல் உள்ளது.இத்திட்டதிற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பணத்தை தமிழக அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கட்டிடம் கட்ட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்ததை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.வேலை கேட்டு அளிக்கும் மனுவிற்கு ஒப்புதல் ரசீது வழங்குவதோடு 15 நாட்களுக்குள் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டிடக் கூலியை 224 ரூபாய் குறைக்காமல் வழங்கவும்,வேலையில்லா நாட்களில் நிவாரணத்தொகை வழங்குதல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர்,கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்தக்கோரி மத்திய,மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க