• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வாலாங்குளம் ஏரியில் திடீரென செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்

July 24, 2018 தண்டோரா குழு

கோவை சுங்கம் பகுதியிலுள்ள வாலாங்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் குளங்களில் அதிக அளவில் மீன்கள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோவை உக்கடம் வாலாங்குளத்தில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் மீன்கள் கிடைத்து வந்தன.இதனிடையே இன்று காலை கோவை சுங்கம் அருகே அருகேயுள்ள வாலாங்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதை கண்ட மீனவர்கள் உடனடியாக இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது மாநகராட்சி பகுதியில் இருந்து கழிவுநீர் நேரடியாக வாலாங்குளத்தில் கலந்து விடுவதாகவும் சில நேரங்களில் வேதிக் கழிவுகளும் கலப்பதால் மீன்கள் செத்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து எந்தப் பகுதியிலிருந்து கழிவுகள் கலக்கின்றன என்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதனிடையே கோவை மாநகர மீனவர்களின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் உக்கடம் பெரிய குளம்,வாலாங்குளம்,குறிச்சி குளம்,சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட குளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க