• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறப்பு காவல்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

July 23, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை நான்காம் அணியில் எழுத்தராக பணியாற்றும் அமர்நாத் என்ற காவலர் முகாம் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ம் அணியில் உள்ள கம்பெனியில் எழுத்தராக பணியாற்றி வருபவர் அமர்நாத்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த 2016ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.அமர்நாத் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில்,நேற்று அமர்நாத் இரவு பத்து மணி வரை பணியில் இருந்த நிலையில் இன்று காலை,அவர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அமர்நாத்தின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில்,அமர்நாத் காதல் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க