• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மகளை கவனிக்காத மருமகனை அடித்து துவைத்த மாமனார்

July 19, 2018 தண்டோரா குழு

கோவையில் தனது மகளை விட்டு பிரிந்த மருமகன் மீண்டும்வந்து தொந்தரவு செய்வதாக கூறிமாமனார்மருமகனை பொதுமக்கள் மத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து துவைத்தார்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள் சாந்தினி கடந்த 10 வருடத்திற்கு முன்பு பழனிசாமி என்பவரை திருமணம் செய்து உள்ளார். ஆனால் பழனிசாமி, மனைவியையும், 3 மாதக் குழந்தையை விட்டு விட்டு சென்று உள்ளார். இதனை அடுத்து சாந்தினி காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென பழனிசாமி அந்த கடைக்கு வந்து தகராறு செய்து உள்ளார். இதைப்பார்த்து கொண்டு இருந்த சாந்தினியின் அப்பா, பழனிசாமியை அடித்து உதைத்து கை கால்களை கட்டி வைத்து உள்ளார். பல வருடங்களாக மனைவியை கவனிக்காமல் இருந்த பழனிச்சாமி தற்போது, தொடர்ந்து தனது மகளை தொந்தரவு செய்வதாகவும், இதனால் அடித்ததாக அவரது மாமனார் தெரிவித்து உள்ளார்.ஆனால் தங்களை மாமனார் வாழவிடாமல் தடுப்பதாக பழனிச்சாமி கூறியுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட மாமனார், மருமகனை அடித்ததை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல்துறையினர் பழனிச்சாமியிடமும், தர்மராஜ் மற்றும் சாந்தினியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க